Pages

Thursday, 18 April 2013

ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலியின் பார்வையில் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)


இமாம் ஹஸனுல் பன்னாவோடு வாழ்ந்து, அவரிடம் பயிற்சி பெற்று, அவரது அறிவு மூலம் பயன் பெற்றவர்களுள் நானும் ஒருவன். ஆளுமைகள் பற்றிய எனது நீண்ட கற்கையிலே, ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அப்துஹு, ரஷீத் ரிழா போன்ற இஸ்லாமியத் தலைவர்களது பாரிய திறமைகள் தொகையொன்றை அல்லாஹ் இமாம் பன்னாவில் பொதியச் செய்துள்ளதனை அவதானித்துள்ளேன். இமாமவர்கள் மக்களுக்கு மத்தியில் பேசினால் சிதறிச் செல்லும் ஒளிக்கீற்றுகள் ஒரு கண்ணாடியில் ஒன்று குவிக்கப்பட்டு, அதன் பயன் பன்மடங்காக்கப்படுவது போன்று மேற்குறித்த ஆளுமைகளை விடவும் தனித்துவமான விடயங்ளை அவரது பேச்சில் நான் அவதானிப்பேன்.

மேற்குக் காலனித்துவத்தின் சிந்தனையில் வரலாற்று வஞ்சகம் இருப்தாகச் சொன்னதில் ஜமாலுத்தீன் முதன்மையானவர். முஸ்லிம்களுடனான உறவில் பீட்டர் துறவி கொண்டிருந்த வஞ்சகங்களை ஐரோப்பா இன்னும் கொண்டிருப் பதாக அவர் முஸ்லிம்களை விழிப்பூட்டினார்.

 உம்மத்தின் நடவடிக்கைகளை பாதுகாப்பான பகுத்தறிவுக்கூடாக நெறிப்படுத்தவும், ஒழுங்குகளை பொது ஷூறாவுக்கூடாக பேணுவதற்கும் உயிர்த்துடிப்பு மிக்கதொரு கல்வி முறைமை வேண்டும் என்ற உம்மத்தின் தேவையை உணர்ந்தவர்களுள் முஹம்மத் அப்துஹு முதன்மையானவர்.

முஹம்மத் ரஷீத் ரிழா அல்குர்ஆனுக்கு விளக்கமாகவும், தூய ஸலபித்துவத்தின் அடையாளமாகவும் இஸ்லாத்தின் குறிக்கோள்களையும் அதன் தடயங்களையும் ஆழமாக அறிந்தவராகவும் இருந்தார்.
மேற்குறித்த அனைவரதும் வாரிசாக இமாம் ஹஸனுல் பன்னா திகழ வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தான். எனவேதான், நகரங்களிலும் கிராமங்களிலும் நிகழ்த்தப்பட்ட அவரது உரைகள் அறிவுபூர்வமானதாகவும் இலக்கியத் தன்மை கொண்டதாகவும் பண்பாடானதாகவும் விநயமானதாகவும் அமைந்திருந்தன. அரிதாக இருப்பினும், அவரைச் செவிமடுத்தோர் அவரால் தாக்கமுற்று அவர் சொற்படியே நடப்பர். இந்த வகையில்தான் அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் எழுச்சி கண்டு இஸ்லாமிய உலகெங்கும் பரவியது. அதன் முதலாவது பொதுவழி காட்டி -முர்ஷிதுல் ஆம்- மூலம் இஸ்லாம் புணருத்தானம் செய்யப்பட்டு, இஸ்லாத்தைப் பழிவாங்கி அதனை மாசுபடுத்திய அரசியல் கலாசாரப் படையெடுப்புகளிலிருந்து இஸ்லாத்தின் இருப்பு பாதுகாக்கப்பட்டது.
அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை இஸ்லாமிய நாடொன்றில் செயற்படும் ஒரு அரசியல் கட்சியாகக் கொள்வது அநீதியாகும். இமாம் ஹஸனுல் பன்னா செயற்பட்ட களம் மிகவும் விசாலமானதாகும். அது அல்குர்ஆனின் இலக்குகளாகும். அதனை அல்குர்ஆன் இப்படிச் சொல்கின்றது.
'நபியே! ஒவ்வொரு விஷயத்துக்கும் தெளிவாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் முஸ்லிம்களுக்கு சுபசோபனமாகவும் உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.' (அந்நஹ்ல்: 89)
இமாம் ஹஸனுல் பன்னா- அவர்கள் தமது உரைகளில் விளைநிலத்தில் விதைகளை விதைப்பது போன்று அறிவை விதைத்தார். இதற்கான காரணம் அவர் கொண்டிருந்த சாமர்தியமிகு திறமையாகும். எமது அறிவு வரலாற்றில் அபூஹாமித் அல்கஸ்ஸாலியைத் தவிர வேறெவரும் இத்திறமையைக் கொண்டிருக்கவில்லை. தத்துவச் சிந்தனைகளையும் சிக்கலான கருத்துக்களையும் தெளிவான முறையில் இனிமையாக மக்களுக்கு விளக்குவார் அவர்.

இவ்வாறுதான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்களும் தன்னை செவிமடுப்போருக்கு மார்க்கத்தினதும் உலகத்தினதும் யதார்த்தங்களைச் சுருக்கமாக முன் வைத்து, மென்மையாகவும் அன்புடனும் இஸ்லாத்தின் பாலான பணிக்கு அவர்களை வழிப்படுத்தி, கடக்கக் கடினமான, கடக்கும்போது தள்ளாட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தைக் கடந்தார். இமாம் ஹஸனுல் பன்னா அவர்களது முயற்சி எதிரிகளது ஈர்ப்பைப் பெற்றது. இமாமவர்களை இஸ்லாத்தின் எதிரிகள் படுகொலை செய்துவிட்டனர்.
இஹ்வான் இயக்கத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் இஸ்லாத்தின் எதிரிகளது ஊதுகுழல்களாக இருக்க வேண்டும், இல்லையெனில் ஏதும் அறியாத அறிவிலிகளாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். நாம் கடந்து கொண்டிருக்கும் காலம் மிகவும் பயங்கரமானது. நாம் சுமந்திருக்கும் இறை தூதுக்கூடே மரணிக்காதிருக்கவே தீர்மானித்திருக்கிறோம். (By; அஷ்கர் தஸ்லீம்)
Home

Sunday, 17 February 2013

Banna & Books

1/ஒரு தடவை இமாம் ஹசன் அல் பன்னாவிடம் நீங்கள் ஏன் புத்தகங்கள் எழுதுவதில்லை எனக் கேட்கப்பட்டது.அதற்க்கு அவர்கள் ஒற்றை வரியில் "நான் மனிதர்களை எழுதுகிறேன் "
80 வருடங்களில் எத்தனை மனிதர்கள் அவரால் எழுதப் பட்டுள்ளார்கள்..!

மனிதன் மரணித்தாலும் இலட்சியங்கள் மரணிப்பதில்லை.

Friday, 24 August 2012

ஹஸனுல் பன்னாவின் பத்து அறிவுரைகள்

01. எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள்.

02. அல்குர்ஆனை ஓதுங்கள்; அல்லது அதனைச் செவிமடுங்கள்; அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள். உங்களது நேரத்தின் ஒரு பகுதியைக் கூட பயனின்றிக
் கழித்துவிடாதீர்கள்.

03. அரபி மொழியைக் கற்பதற்கும் பேசுவதற்கும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அது இஸ்லாத்தின் மூலாதார நூல்களின் மொழியாகும்.

04. எந்தவொரு விஷயத்திலும் தர்க்கம் புரியாதீர்கள். ஏனெனில், தர்க்கம் புரிவதால் எந்த நன்மையும் விளையாது.

05. அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வுடன் தொடர்புள்ள மனிதன் எப்போதும் அமைதியாகவும் கண்ணியமாகவுமே நடந்து கொள்வான்.

06. யாரையும் பரிகாசம் செய்யாதீர்கள். ஏனெனில், வெற்றியை இலக்காகக் கொண்ட சமூகம், எதையும் இலக்கோடுதான் பார்க்கும்.

07. தேவையைவிட அதிகமாகக் குரலெழுப்பாதீர்கள். அது பிறருக்கு விகார மாகவும் தொல்லையாகவுமே இருக்கும்.

08. தனிமனிதர்களைப் பற்றிப் புறம் பேசுவதையும் அமைப்புகளைக் குறை கூறுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நல்லவற்றைத் தவிர வேறெதையும் பேசாதீர்கள்.

09. நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு சகோதரருடனும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்கள் அதனை உங்களிடம் எதிர்பார்க்காவிட்டாலும் சரியே. ஏனெனில், நமது அழைப்புப் பணியின் அடிப்படையே பரஸ்பர அறிமுகம்தான்.

10. நேரத்தைவிட கடமைகள் அதிகம். பிறர் தமது நேரத்தைப் பயனுள்ளதாக்க உதவுங்கள். பிறரிடம் உங்களுக்கு ஏதாவது தேவையிருந்தால் அதைச் சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள்.

-ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ், Thanks : Meelparvai Mmc


Home

Saturday, 12 May 2012

யார் இந்த ஹஸன் அல் பன்னா ?


அன்பர்களின் கவனத்திற்கு:
இக்கட்டுரை யூத நஸாறாக்களின் நூற்களைத் தழுவியோ அல்லது இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் வழிகேடு எனக் கூறும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் நூற்களை மேற்கோள் காட்டியோ அல்லது நடுநிலையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாககொண்டோ எழுதப்படவில்லை. மாறாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா அவர்களால் எழுதப்பட்ட அவரது சுயச‌ரிதையான  ‘ முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா ‘ (பிரச்சாரத்தினதும் பிரச்சாரகனினதும் நாட்குறிப்பு) எனும் நூலை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டது என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.!!!

‌அறிந்தவை…….
----------------------

‘இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஓர் உலகளாவிய இயக்கம். முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஜனரஞ்சகமான இயக்கம். முஸ்லிம் சமூகத்தில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க பாடுபடும் ஓர் இயக்கம்.  இவ்வியக்கம் எகிப்தில் ஹஸனுல் பன்னா என்பவரால் உருவாக்கப்பட்டது’ என்பன போன்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் பற்றிய மேலோட்டமான விடயங்களையே எம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம்.

அறியவேண்டியவை……..
-----------------------------

எனினும் ‘இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா என்பவர் யார்?  அவருடைய வாழ்க்கைப் பின்புலம் என்ன?  எத்தகைய சூழலில் அவர் இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார்? இவ்வியக்கத்தை உருவாக்க வழிநடாத்த  அவர் கையாண்ட வழிமுறைகள் (தந்திரோபாயங்கள்) என்ன? ‘ என்பன போண்ற விடயங்களை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உலமாக்கள் ஆய்வாளர்கள் அபிமானிகள் உட்பட பலரும் அலட்டிக் கொள்வதுமில்லை; அறிந்துகொள்ள ஆர்வங்காட்டுவதுமில்லை; பக்கசார்பற்ற நடுநிலையான ஆய்வுக்குட்படுத்த முன்வருவதுமில்லை.???

அல்லாஹ்வின் உதவியால் ஒரு சிறு முயற்சி
---------------------------------------------------------------
மேற்படி இடைவெளியை நிரப்பும்  முயற்சியின் ஒரு கட்டமாகவே இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகரின் வாழ்க்கைப் பின்புலத்தையும் அவர் எவ்வாறு இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதையும் சுருக்கமாக இக்கட்டுரையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர்
ஓர் விரைவுப் பார்வை

பிறப்பு:

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா என்பவர் எகிப்தின் ‘புஹைறா’ மாகாணத்தில் உள்ள ‘மஹ்மூதிய்யா’ எனும் கிராமத்தில் 1906ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி பிறந்தார்.

ஹஸன் அல் பன்னா :
------------------------------

ஹஸனுல் பன்னாவின் தந்தை :
--------------------------------------------

இவரது தந்தை அஹ்மத் அப்துர் றஹ்மான் அல் பன்னா  என்பவர் கடிகாரம் திருத்தும் தொழிலை செய்துவந்ததுடன் ஹதீஸ் கலையை கற்ற ஒரு அறிஞராகவும் திகழ்ந்தார்.
‘முஸ்னத் அஹ்மத்’ எனும் மாபெரும் ஹதீஸ் கிரந்த்திற்கு இவர் வழங்கிய ‘அல் பத்ஹுர் ரப்பானி’ எனும் ‘ஒழுங்கமைப்பு’  நூலும் ‘புலூகுல் அமானி’ எனும் விரிவுரை நூலும் இவரின் மகத்தான பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். (அல்லாஹ் அன்னாரின் பணிகளை அங்கீகரித்து என்றென்றும் அருள் புரிவானாக)

ஹஸனுல் பன்னா ஒரு தீவிர ஸூபியாக‌:
---------------------------------------------------------

சொந்த ஊரான ‘மஹ்மூதியா’வில் காணப்பட்ட குர்ஆன் மத்ரஸாவில் இணைந்து அல்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்ய வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக  அரச பாடசாலையில் இணைந்துகொண்ட ஹஸனுல் பன்னா அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட தரீக்கா அமைப்புகள் சிலவற்றில் சேர்ந்து தன்னை ஒரு ஸூபியாக பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.
இவர்  தனது பாடசாலை நாட்களில் ஸஹ்பான் றஜப் ஆகிய இரு மாதங்கள் நோன்பு நோற்றதையும் தனது நன்பர்கள் சிலருடன் சேர்ந்து வகுப்பறையில் ‘கல்வத்’  (தனிமை) அனுஷ்டித்ததையும்!! அதன் போது ‘மௌனவிரதம்’ இருந்ததையும் இதனால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்பத்தையும் அவரே தனது சுய சரிதையில் எடுத்தெழுதியிருப்பது வழிகெட்ட ஸூபித்துவத்தினால் ஹஸன் அல் பன்னா அவர்கள் சிறுபிராயத்திலேயே எந்தளவிற்கு தாக்கமடைந்திருந்தார் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(பார்க்க ‘முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா 19_ 31)
ஹஸனுல் பன்னா ஓர் ஆசிரியராக‌:
------------------------------------------------

இவ்வாறே தனது ஆரம்பக்கல்வியை பித்அத்துகளிலும் மௌனவிரதம் போண்ற வேற்றுமத வழிபாட்டு முறையிலும் கழித்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது பதி்நான்காம் வயதில் ‘தமன்ஹூர்’ நகரில் உள்ள ‘முதல் நிலை ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்துகொண்டார்.

மேற்படி பாடசாலையில் சேர்வதற்கு ‘அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும்’ என்ற தகமை கட்டாயமாக இருந்தபோதும் அல்குர்ஆனின் ஒரு சில பகுதிகளையே (ஜுஸ்உ) மனனம் செய்திருந்த ஹஸன் அல் பன்னாவை அப்பாடசாலை அதிபர் ‘பஸீர் தஸூகி மூஸா’ அவர்கள் ஓர் வாய்மொழிப் பரீட்சை மூலமாகவும் மற்றொரு எழுத்துப் ப்ரீட்சை மூலமாகவும் பரிசோதித்து இரு வருட கற்கை நெறிக்காக அப்பாடசாலையில் சேர்த்துக் கொண்டார்.

ஹஸனுல் பன்னா ஓர் தீட்சை பெற்ற முரீதாக:
-----------------------------------------------------------------

இக்காலப்பகுதியியே ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்வில் முக்கிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியலிலேயே வழிகெட்ட ஷாதுலிய்யா தரீக்காவின் உட்பிரிவுகளில் ஒன்றான ‘ஹஸ்ஸாபிய்யா தரீக்கா’வின் முக்கிய பிரமுகர்களான ‘ஷேக் ஷிப்லிஇ முஹம்மத் அபூ ஷவ்ஷாஇ ஷேக் ஸெய்யித் உஸ்மான்இ அப்துல் முஹ்தால் போன்றோரின் நட்பும் அத‌னூடாக தரீக்காவின் த‌லைவர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது.

இவர்களோடு இணைந்து ‘தமன்ஹூர்’ நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுவரை கால்நடையாகச் சென்று ஔலியாக்களின் சமாதிகளை!!! தரிசிக்கும் செயல்களிலும் ஹஸனுல் பன்னா அவர்கள் ஈடுபட்டார்கள்.

மேற்படி சூழலில்தான் ஹஸனுல் பன்னா அவர்கள் தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களிடம் ‘பைஅத்’ ( ‘எச்சந்த‌ர்ப்பத்திலும் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்’ என்ற உறுதி மொழி)  பெற்றுக் கொண்டு  தரீக்காவில் இணைந்து ‘அல்ஜம்இய்யதுல் ஹஸ்ஸாபியா லில் பிர்’ ஹஸ்ஸாபியா நலன்புரிச் சங்கம் எனும் சங்கத்தை ஸ்தாபித்து மிகக் கடுமையாக உழைத்து அச்சங்கத்தின் செயலாளர் பதவியையும் அடைந்து கொண்டார்கள்.

‘பைஅத்’ ஒரு சிறு விளக்கம்:
---------------------------------------

இவ்விடத்தில் இஸ்லாத்தின் பார்வையில் ‘பைஅத்’ என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இரு வகையான ‘பைஅத்’க‌ளையே அனுமதித்து ஆர்வமூட்டி வலியுறுத்துகின்றன.

1. அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதாக அல்லாஹ்விடம் ‘பைஅத்’ செய்வது.
2.அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாத விடயங்களில் இஸ்லாமிய ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக அவரிடம் ‘பைஅத்’ செய்வது.

மேற்படி முதலாவது வகையான அல்லாஹ்விடம் செய்யவேண்டிய ‘பைஅத்’தை ‘(நபியே) உம்மிடம் ‘பைஅத்’ செய்பவர்கள் அல்லாஹ்விடம் ‘பைஅத்’ செய்கிறார்கள்’ (48:10) எனும் அல்குர் ஆன் வசனத்திற்கேற்ப நபி (ஸல்) அவர்களிடம் செய்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்பு இவ்வகை ‘பைஅத்’தை வேறு யாரிடமும் செய்துகொள்ளக்கூடாது.

இரண்டாவது வகையான ‘பைஅத்’ தை சர்வ அதிகாரங்கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளருக்கு செய்யவேண்டுமே தவிர தரீக்காக்களின் ஷேக்மார்கள் இயக்கத்தலைவர்கள் ஆகியோருக்கு ஒரு போதும் செய்துகொடுக்கக்கூடாது என்பதை மாத்திரம் இவ்விடத்தில் சுருக்கமாக விளங்கிக்கொண்டு எமது கட்டுரையைத் தொடர்வோம்.

ஹஸனுல் பன்னா ஒரு தரீக்காப் பிரச்சாரகராக:
------------------------------------------------------------------

இவ்வாறே ஆரம்ப ஆசிரியர் பயிற்சியை இரு வருடங்களில் பூர்த்தி செய்த ஹஸனுல் பன்னா அவர்கள் பின்பு ‘தாருல் உலூம்’ கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை தனது இருபத்தியாறாவது வயதில் முழுமையாக முடித்து 1928ம் ஆண்டு வெளியேறினார்கள்.

குறித்த ஆண்டிலேயே எகிப்தின் பிரபலமான ‘இஸ்மாஈலிய்யா’  நகரத்தில் அறபு மொழி ஆசிரியராக நியமனம் பெற்று கடமையாற்ற ஆரம்பித்தார்.

மேற்குறிப்பிட்ட ‘இஸ்மாஈலிய்யா’ நகரத்திலேயே ஹஸனுல் பன்னாவின் முழுத்திறமையும் வெளிப்பட்டது. அறிவையும் அறிஞர்களையும் மதிக்கும் இஸ்மாஈலியா மக்கள் மத்தியில் அல்குர் ஆனின் சில பகுதிகளையும் ‘தீவானுல் முதனப்பிஹ்’ உட்பட சில அறபுக் கவித்தொகுப்புகளையும் மனனம் செய்திருந்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது உணர்வுபூர்வமான பேச்சினாலும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துக் கொண்டார்கள்.

பள்ளிவாயில்களில் மாத்திரமின்றி மக்கள் மண்றங்கள்இ உணவகங்கள்இ பொது மைதானங்கள்இ தெருமுனைகள் போண்ற இடங்களில் ஹஸனுல் பன்னா அவர்களால் முடுக்கிவிடப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக மக்கள் சாரிசாரியாக ‘ஹஸ்ஸாபிய்யா’ தரீக்காவில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு மக்கள் ஆதரவு பெருகப்பெருக  வெறுமனே ‘ஒரு தரீக்காவின் நலன்புரிச்சங்கம்’ என்ற நிலையில் இருந்து சீர்திருத்தம்இ சமூக மாற்றம்இ தீமையை எதிர்த்தல்இ பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுத்தல் போண்ற சமூக நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதன் காரணமாக இஸ்மாஈலிய்யா நகரத்தில் தனது தரீக்காவுக்கென தனியான பள்ளிவாயில் ஒன்றையும் பெண்களுக்கான பிரச்சார நிலையம் (சென்டர்) ஒன்றையும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் அமைத்துக்கொண்டார்.

இவ்வாறே அரசியல் ஆட்சி என்பனவற்றுடன் அனுவளவும் சம்பந்தப்படாமல் முழுக்க முழுக்க ஒரு ஸூபித்துவ அமைப்பாகவே செயற்பட்டு நாடளாவிய ரீதியில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டதன் பின்புதான்இ ‘ஹஸ்ஸாபிய்யா தரீக்கா’வுக்குள் தனது கை மேலோங்கியதன் பின்புதான் ஹஸனுல் பன்னா தனது துரோகச் செயலை செயற்படுத்த ஆரம்பித்தார்.

ஹஸனுல் பன்னா குருவை மிஞ்சிய சீடனாக‌:
---------------------------------------------------------------
ஆம் ‘ எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்’ என தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வ‌ஹ்ஹாப் அவர்களுக்கு செய்திருந்த ‘பைஅத்’ (உறுதி மொழி) யை உடைத்துக்கொண்டு தரீக்காவின் பெருமள‌விலான தொண்டர்களை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் தனி இயக்கத்தை 1928ம் ஆண்டில உருவாக்கினார்.!!!‌

மேற்படி பச்சைத்துரோகத்தை ஹஸனுல் பன்னா அவர்களே தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்படும் வரை ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வந்தது. எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் உருவாக்கப்பட்ட போது அவருக்கு அதில் உடன்பாடு இருக்க‌வில்லை. அது அவரது அபிப்பிராயம்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிராயம்.!!!?’

பிளவுபட்ட இஹ்வான்கள்:
-------------------------------------

இவ்வாறு துரோகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் கொல்லப்படும் வரை ஓரணியாக வழிநடாத்திச்செல்ல முடிந்ததா? அல்லது ‘ ஒரு கெட்ட செயலுக்கான‌ கூலி அதைப் போண்றதொரு கெட்ட செயலே’ (42:40) எனும் அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்பவும் ‘விணை விதைத்தவன் விணை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்’ எனும் முதுமொழிக்கேற்பவும்   உள்ளிருந்து ஏற்பட்ட துரோகத்தால் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு உள்ளிருந்து ஏற்பட்ட துரோகங்களினாலேயே பல கூறுகளாக பிளவுப்ட்டுப் போனதா? என்பதை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கட்டுரைகளில் தொடந்தும் நோக்குவோம்.

எமது பிரார்த்தனை
‘எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதர‌ர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)
Home               Sri Lanka Think Tank-UK (Main Link)

Monday, 19 July 2010

Letter to a Muslim Student by Sayyed Hassan Al Banna

[Hassan al Banna was born in 1906 in Egypt into a family of scholars. In 1928, he formed Ikhwan al Muslimeen (the Muslim Brotherhood organization). This movement for the revival of Islam soon spread across Egypt and the region. In December 1948, the Muslim Brotherhood organization was suppressed and thousands of its members arrested. Hassan al Banna was spared arrest only to be assassinated in February 1949.

Letter to a Muslim Student is the English translation of a letter that Hassan al Banna wrote to one of his students that was studying in the West. The sincere advice contained in this letter is drawn from the perennial values and ethos of Islam. It reminds the addressee and indeed all Muslims that the first and foremost goal in a Muslims life is to please God and live in accordance to His sacred law. Also, it brings home that studying ought not to be an end in itself or for seeking material gain. A Muslim ought to excel in his or her study in order to work for Islam and benefit humanity.]

My brother in Islam (who may Allah guard and protect). I praise Allah for there is no god but Him. May the peace and blessings of Allah be upon Muhammad, who was sent as a mercy to all of humanity, upon his family, companions and on all those who hold fast to the Shariah until the Day of Judgement.

May the peace and blessings of Allah be upon you when you travel with a proper intention and a noble purpose, and when you return with a sound endeavor and to a dedicated cause.

May the peace and blessings of Allah be upon you as you serve Islam with the finest fruits of science and the best of knowledge.

Dearest brother, you will be amongst people you have not known before and characters you are not accustomed to. In you they will see the example of a Muslim. So make sure they see in you the best example and the finest image, in order for them to understand that the word 'Muslim' embodies virtue and nobility.

With you is a precious trust, that is your righteous wife, appreciate this. Towards her be a trustworthy companion. Provide her with comfort and happiness. Share with her felicity, without being careless in acquiring your rights and negligent in performing your duties.

Read these few words that are borne out of my love and sincerity for you, as an elder brother expressing for his brother and sister the best wishes and the happiest life.

O my brother, excel in your observance of Allah (swt) in all your dealings. Understand that He (swt) keeps watch over you, sees you and encompasses all that is of concern to you - wherever you are. He knows the treachery of your eyes and all that your heart conceals. Strive not to let Allah (swt) see you, except that He is pleased with you.

Do not be unmindful in your observance of the One (glorified and exalted is He), otherwise Satan will infiltrate you and you will be overcome by the whispers of your whims and desires. Believe, my dearest brother, that whenever a heart is conscious of Allah's observance, it will never be approached by Satan. However, once it departs from Allah's awareness, evil will be attracted to it and it will be inhabited by whims and desires. So, consolidate your heart with the observance of Allah and in vigil seek refuge from your surroundings and do not be among the unmindful.

Perform the obligatory duties which Allah has enjoined upon you, at their appointed times. Do not neglect them by relying on performing them at a later time, because you are busy with work or resorting to other excuses for justification. This is a deception of your own self and of your own whims:

And follow not desire that it beguile you from the way of Allah (Sad 38: 26).

Understand also my dearest brother that no one draws nearer to Allah with anything more beloved to Him than performing the obligatory duties as stated in the hadith of al-Bukhari. So be aware not to neglect your obligatory duties or feel lazy in performing them; they are Allah's right over you. Be steadfast in prayer and perfect your fast.

If you are in a state of complete inability to fast, then according to the saying of Allah (swt) you have a remission: ...

For those who are capable of fasting (but still do not fast) there is a redemption: feeding a needy man for each day missed. Whoever, voluntarily, does more good than is required, will find it is better for him; and that you should fast is better for you, if you only know (al-Baqara 2: 184). But be aware not to take this verse as an excuse for falling short.

Fasting with hardship in the homeland of the West will earn you a valuable reward and be an asset to your account; it is pleasing to your Lord and righteous to yourself. So do not attempt to break the fast, unless you are unable to complete it. I need not advise you, any further, towards your obligatory duties, after all they are your capital. Can you imagine one who has wasted his capital, what will his state be amongst tomorrow's profit makers?

Spend whatever time you can in performing supererogatory works as duties of obedience. Perform the sunna prayers. Increase your appeal for forgiveness and the praising of your Glorified Lord. Remember, that ones supplication, during travel or in expatriation, will be answered; hence, increase your supplication in secret and in humility. Continue your remembrance of Allah (swt).

The Prophet (saw) advised Ali (ra) to continuously dampen his tongue in the remembrance of Allah. Do not abandon that path which leads you to nothing but duties and obedience, they are like an investment that multiply rewards. The remembrance of Allah amongst the unmindful nations is like a shining light. So make use of this time, for it is a season to harvest the rewards of the Hereafter, only for those who wish to seize the opportunities and benefit from such seasons.

Increase your recitation of the Glorious Quran with understanding and deliberation. It is a healing for the soul and a comfort to the heart. Designate from it a portion to read at the beginning of the day and a portion to read at the end of it, hence the best beginning and the best end. In the delights of life and pleasures of the world, you will see that which inclines the heart, impresses the mind, attracts the eye and bewilders those whose spirits are weak. Do not let these seduce you away from virtue and cause you to forget the Hereafter: Do not turn your eyes covetously towards the embellishments of worldly life that We have bestowed upon various kinds of people to test them. But the clean provision bestowed upon you by your Lord is better and more enduring. Enjoin Prayer on your household, and do keep observing it. We do not ask you for any worldly provision; rather, it is We Who provide you. The ultimate end is for piety (Ta Ha 20: 131-2).

Be aware my dearest brother that in the sight of Allah (swt) all these pleasures weigh not even the wing of a gnat and lead neither to honor nor virtue. They are nothing but the manifestations of whims and pitfalls of seduction. So be careful not to let Satan deceive you, otherwise you will plunge into the abyss of sin and corruption.

Always remember the words of Allah (swt):

Men are naturally tempted by the lure of women, children, treasures of gold and silver, horses of mark, cattle and plantations. These are the enjoyments in the life of this world; but with Allah lies a goodly abode to return to (Al Imran 3:14). The Book of Allah recites these facts day and night. So do not be amongst those who favor the worldly life over the Hereafter, or amongst those deceived by the outward appearance of things without considering their essence.

All pleasures brought by contemporary civilization will result in nothing other than pain. A pain that will overwhelm their enticement and remove their sweetness. So avoid the worldly aspects of these people; do not let it take over your command and deceive you, if you are to be among the successors.

Dearest brother, what Allah has made Haram (unlawful) for us, those people consider it as Halal (lawful) for them. Hence, when they commit a Haram (unlawful) act, they will neither feel ashamed nor will they refrain from perpetrating it. You should neither agree with their whims nor mix with them in their sins. Otherwise, you will not be relieved from having to answer before Allah (swt) and it will not hold as an excuse on the Day of Judgment. Do not take their girls for company, and do not let there develop between you and them, any special friendship or any emotional relationship. If this kind of socializing is a sin for those other than you, then it is a sin twice as great for you and you know well the meaning of this. Although you are known to us to be one that is trustworthy and decent, I have mentioned this to you, to caution you against the downfalls of sins so that your feet may never slip. And in your chastity let there be content and in your dignity let there be adequacy. As for alcohol, do not approach it and do not use the climate as an excuse, because when Allah made it Haram (unlawful), He had full knowledge about all types of climate but did not exclude one country from another or one nation from another from this prohibition. Allah (swt) made it forbidden with neither doubt nor exception. So be aware not to let it occupy a part of your abdomen, otherwise it will remain as a black spot on its pure skin.

Be determined as much as possible before the first drink. Because once your mind is concealed by it, you will follow it by the second and third drink, whereby you will have fallen into a pit, difficult to escape from and will have incriminated yourself and others. then, even if you expiated this sin with repentance, you would still not match your original purity and superb credibility.

Do not taste anything in those restaurants which serve Haram (unlawful) food, like pork and dead meat. In that which is Halal (lawful) you have a substitute and enough for contentment. So do not taste the Haram (unlawful) and do not let your flesh grow on it, otherwise fire is what it deserves. Allah (swt) has prohibited that which is impure: . . . He enjoins upon them what is good and forbids them what is evil... (al-Araf 7: 157). So leave that which is bad for that which is good. As for casinos, night-clubs, and other such places of vanity, your time is far too precious to be wasted in them. I have looked into the saying, time is made of gold, and I do not approve of it. Time is far more precious than gold, for time is life. Is it not true that your life is nothing but a few hours and you never know when they will end? Dearest brother, be stringent with your time and do not spend it except in that which is significant, and acquire pleasure in that which is lawful.

In the heavens there is calmness and on the earth there is beauty. In the gardens there is freshness and in you there is a sign. In the sea there is might and in the air there is nourishment. Take from all this comfort for your soul and recovery for your mind. And do not waste your time by being unmindful, this will shield you from good and lead you to evil.

Be critical, with insight, and be just and well acquainted with people. Do not let your goodness draw you to forget their bad, and their bad hurt you to forget their goodness. Rather study them as would a researcher and an examiner. Encompass with knowledge all of their affairs, and then with an eye of insight, scrutinize it all. Present back the good that you find to your people and nation, and return with it victorious and supported. Other than that, throw it back on them and do not come back until you have dusted off your hands and emptied your mind of it all.

You will find there a group of people dishonoring your Prophet (saw), faulting your Quran and disgracing your people. Do not sit with such people, until they turn to a different theme, even if it is necessary for you to enter into a dialogue with them. Argue with them in the best manner. Explain to them the good that you know and avoid controversies that lead to hatred and sedition (fitnah).

Lo! You (O Mohammed) guide not whom you love, but Allah guides whom he will. And He is best aware of those who walk aright (al-Qasas 28: 56).

Dearest brother, be aware that calling the people through practical example is far better than calling them through speech. It is far more fruitful and beneficial to use your commendable character, the perfection of yourself and your straight manner to defend and call them to your religion and nation. Whenever an opportunity arises for you to deliver a speech or a lecture at one of their meeting places or societies, prepare yourself for it. Choose that which will not stir disorder and that which will not offend integrity. Do not be apprehended by their stance, because Allah's aid is with those who are sincere. Be positive and do not insult other people's beliefs instead, elucidate to them their innate goodness and reveal to them our beliefs. By doing so, you will have adequately promoted awareness and incentive.

Finally, and there is still so much for me to say and I would have loved to continue this advice with you, yet my concern is that if I prolong this discourse any more, you may forget most of what I have said; for over speaking does distract one from what is being said. For both of you then, may Allah raise you to be the best of the successors and may His safety accompany you.

May He protect both of you and return you in goodness, as is wishes by those who are sincere. I entrust to Allah your religion, your obligations and the outcome of your actions. May the peace and blessings of Allah be upon you.
 
Home               Sri Lanka Think Tank-UK (Main Link)

Sunday, 31 January 2010

Biography of Ash-Shaheed Hassan Al-Banna (Rahimulla)

Early life

Banna was born in 1906 in Mahmudiyya, Egypt (north-west of Cairo). His father, Shaykh Ahmad al-Banna, was a respected local imam (prayer leader) and mosque teacher of the Hanbali rite. He was not educated at Al-Azhar University (Lia 24, 1998). He wrote and collaborated on books on Muslim traditions, and also had a shop where he repaired watches and sold gramophones. Though Shaykh Ahmad al Banna and his wife owned some property, they were not wealthy and struggled to make ends meet, particularly after they moved to Cairo in 1924. Like many others, they found that Islamic learning and piety were no longer as highly valued in the capital, and that craftsmanship could not compete with large-scale industry.[1][2]

When Hassan al-Banna was twelve years old, he became involved in a Sufi order, and became a fully initiated member in 1922.[3][4] At the age of thirteen, he participated in demonstrations during the revolution of 1919 against British rule.[5][6]

Establishment of the Muslim Brothers

It was to spread this message that Al-Banna launched the Society of the Muslim Brothers in March 1928. At first, the society was only one of the numerous small Islamic associations that existed at the time. Similar to those that Al-Banna himself had joined since he was 12, these associations aimed to promote personal piety and engaged in charitable activities. By the late 1930s, it had established branches in every Egyptian province.

A decade later, it had 500,000 active members and as many sympathizers in Egypt alone, while its appeal was now felt in several other countries as well. The society's growth was particularly pronounced after Al-Banna relocated its headquarters to Cairo in 1932. The single most important factor that made this dramatic expansion possible was the organizational and ideological leadership provided by Al-Banna.

In Ismaïlia, in addition to his day classes, he carried out his intention of giving night classes to his pupils' parents. He also preached in the mosque, and even in coffee-houses, which were then a novelty and were generally viewed as morally suspect. At first, some of his views on relatively minor points of Islamic practice led to strong disagreements with the local religious élite, and he adopted the policy of avoiding religious controversies.[7][8]

He was appalled by the many conspicuous signs of foreign military and economic domination in Isma'iliyya: the British military camps, the public utilities owned by foreign interests, and the luxurious residences of the foreign employees of the Suez Canal Company, next to the squalid dwellings of the Egyptian workers.[7]

Political Activity

He endeavored to bring about the changes he hoped for through institution-building, relentless activism at the grassroots level, and a reliance on mass communication. He proceeded to build a complex mass movement that featured sophisticated governance structures; sections in charge of furthering the society's values among peasants, workers, and professionals; units entrusted with key functions, including propagation of the message, liaison with the Islamic world, and press and translation; and specialized committees for finances and legal affairs.

In anchoring this organization into Egyptian society, Al-Banna relied on pre-existing social networks, in particular those built around mosques, Islamic welfare associations, and neighborhood groups. This weaving of traditional ties into a distinctively modern structure was at the root of his success. Directly attached to the brotherhood, and feeding its expansion, were numerous businesses, clinics, and schools. In addition, members were affiliated to the movement through a series of cells, revealingly called usar (families. singular: usrah).

The material, social and psychological support thus provided were instrumental to the movement's ability to generate enormous loyalty among its members and to attract new recruits. The services and organizational structure around which the society was built were intended to enable individuals to reintegrate into a distinctly Islamic setting, shaped by the society's own principles.

Rooted in Islam, Al-Banna's message tackled issues including colonialism, public health, educational policy, natural resources management, Marxism, social inequalities, Arab nationalism, the weakness of the Islamic world on the international scene, and the growing conflict in Palestine. By emphasizing concerns that appealed to a variety of constituencies, Al-Banna was able to recruit from among a cross-section of Egyptian society — though modern-educated civil servants, office employees, and professionals remained dominant among the organization's activists and decisionmakers.

Al-Banna was also active in resisting British imperialism in Egypt. During World War II, he was briefly arrested by the pro-British administration, who saw him as subversive.

Last Days and Assassination

Between 1948 and 1949, shortly after the society sent volunteers to fight in the war in Palestine, the conflict between the monarchy and the society reached its climax. Concerned with the increasing assertiveness and popularity of the brotherhood, as well as with rumors that it was plotting a coup, Prime Minister Mahmoud an-Nukrashi Pasha disbanded it in December 1948. The organization's assets were impounded and scores of its members sent to jail. Less than three weeks later, the prime minister was assassinated by a member of the brotherhood.

This in turn prompted the assassination of Al-Banna. On February 12, 1949 in Cairo, Al-Banna was at the Jamiyyah al-Shubban al-Muslimeen headquarters with his brother in-law Abdul Karim Mansur to negotiate with Minister Zaki Ali Basha who represented the government side. Minister Zaki Ali Basha never arrived. By 5 o'clock in the evening Al-Banna and his brother-in-law decided to leave. The assassination happened when Al-Banna and his brother in-law called a taxi. As they stood waiting for the taxi, they were shot by two men. Al-Banna was hit by seven shots. Laterwards, he was taken to hospital and they had received orders from the monarchy to not give him any treatment where he died a slow death from the wounds, Hassan Al-Banna realised that they had been ordered not to treat him and he made 3 Dua's against the Monarchy, this monarchy was soon overthrown by Gamal Abdul Nasir.

Ends/