Pages

Thursday 18 April 2013

ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலியின் பார்வையில் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)


இமாம் ஹஸனுல் பன்னாவோடு வாழ்ந்து, அவரிடம் பயிற்சி பெற்று, அவரது அறிவு மூலம் பயன் பெற்றவர்களுள் நானும் ஒருவன். ஆளுமைகள் பற்றிய எனது நீண்ட கற்கையிலே, ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அப்துஹு, ரஷீத் ரிழா போன்ற இஸ்லாமியத் தலைவர்களது பாரிய திறமைகள் தொகையொன்றை அல்லாஹ் இமாம் பன்னாவில் பொதியச் செய்துள்ளதனை அவதானித்துள்ளேன். இமாமவர்கள் மக்களுக்கு மத்தியில் பேசினால் சிதறிச் செல்லும் ஒளிக்கீற்றுகள் ஒரு கண்ணாடியில் ஒன்று குவிக்கப்பட்டு, அதன் பயன் பன்மடங்காக்கப்படுவது போன்று மேற்குறித்த ஆளுமைகளை விடவும் தனித்துவமான விடயங்ளை அவரது பேச்சில் நான் அவதானிப்பேன்.

மேற்குக் காலனித்துவத்தின் சிந்தனையில் வரலாற்று வஞ்சகம் இருப்தாகச் சொன்னதில் ஜமாலுத்தீன் முதன்மையானவர். முஸ்லிம்களுடனான உறவில் பீட்டர் துறவி கொண்டிருந்த வஞ்சகங்களை ஐரோப்பா இன்னும் கொண்டிருப் பதாக அவர் முஸ்லிம்களை விழிப்பூட்டினார்.

 உம்மத்தின் நடவடிக்கைகளை பாதுகாப்பான பகுத்தறிவுக்கூடாக நெறிப்படுத்தவும், ஒழுங்குகளை பொது ஷூறாவுக்கூடாக பேணுவதற்கும் உயிர்த்துடிப்பு மிக்கதொரு கல்வி முறைமை வேண்டும் என்ற உம்மத்தின் தேவையை உணர்ந்தவர்களுள் முஹம்மத் அப்துஹு முதன்மையானவர்.

முஹம்மத் ரஷீத் ரிழா அல்குர்ஆனுக்கு விளக்கமாகவும், தூய ஸலபித்துவத்தின் அடையாளமாகவும் இஸ்லாத்தின் குறிக்கோள்களையும் அதன் தடயங்களையும் ஆழமாக அறிந்தவராகவும் இருந்தார்.
மேற்குறித்த அனைவரதும் வாரிசாக இமாம் ஹஸனுல் பன்னா திகழ வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தான். எனவேதான், நகரங்களிலும் கிராமங்களிலும் நிகழ்த்தப்பட்ட அவரது உரைகள் அறிவுபூர்வமானதாகவும் இலக்கியத் தன்மை கொண்டதாகவும் பண்பாடானதாகவும் விநயமானதாகவும் அமைந்திருந்தன. அரிதாக இருப்பினும், அவரைச் செவிமடுத்தோர் அவரால் தாக்கமுற்று அவர் சொற்படியே நடப்பர். இந்த வகையில்தான் அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் எழுச்சி கண்டு இஸ்லாமிய உலகெங்கும் பரவியது. அதன் முதலாவது பொதுவழி காட்டி -முர்ஷிதுல் ஆம்- மூலம் இஸ்லாம் புணருத்தானம் செய்யப்பட்டு, இஸ்லாத்தைப் பழிவாங்கி அதனை மாசுபடுத்திய அரசியல் கலாசாரப் படையெடுப்புகளிலிருந்து இஸ்லாத்தின் இருப்பு பாதுகாக்கப்பட்டது.
அல்இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை இஸ்லாமிய நாடொன்றில் செயற்படும் ஒரு அரசியல் கட்சியாகக் கொள்வது அநீதியாகும். இமாம் ஹஸனுல் பன்னா செயற்பட்ட களம் மிகவும் விசாலமானதாகும். அது அல்குர்ஆனின் இலக்குகளாகும். அதனை அல்குர்ஆன் இப்படிச் சொல்கின்றது.
'நபியே! ஒவ்வொரு விஷயத்துக்கும் தெளிவாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் முஸ்லிம்களுக்கு சுபசோபனமாகவும் உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.' (அந்நஹ்ல்: 89)
இமாம் ஹஸனுல் பன்னா- அவர்கள் தமது உரைகளில் விளைநிலத்தில் விதைகளை விதைப்பது போன்று அறிவை விதைத்தார். இதற்கான காரணம் அவர் கொண்டிருந்த சாமர்தியமிகு திறமையாகும். எமது அறிவு வரலாற்றில் அபூஹாமித் அல்கஸ்ஸாலியைத் தவிர வேறெவரும் இத்திறமையைக் கொண்டிருக்கவில்லை. தத்துவச் சிந்தனைகளையும் சிக்கலான கருத்துக்களையும் தெளிவான முறையில் இனிமையாக மக்களுக்கு விளக்குவார் அவர்.

இவ்வாறுதான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்களும் தன்னை செவிமடுப்போருக்கு மார்க்கத்தினதும் உலகத்தினதும் யதார்த்தங்களைச் சுருக்கமாக முன் வைத்து, மென்மையாகவும் அன்புடனும் இஸ்லாத்தின் பாலான பணிக்கு அவர்களை வழிப்படுத்தி, கடக்கக் கடினமான, கடக்கும்போது தள்ளாட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தைக் கடந்தார். இமாம் ஹஸனுல் பன்னா அவர்களது முயற்சி எதிரிகளது ஈர்ப்பைப் பெற்றது. இமாமவர்களை இஸ்லாத்தின் எதிரிகள் படுகொலை செய்துவிட்டனர்.
இஹ்வான் இயக்கத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் இஸ்லாத்தின் எதிரிகளது ஊதுகுழல்களாக இருக்க வேண்டும், இல்லையெனில் ஏதும் அறியாத அறிவிலிகளாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். நாம் கடந்து கொண்டிருக்கும் காலம் மிகவும் பயங்கரமானது. நாம் சுமந்திருக்கும் இறை தூதுக்கூடே மரணிக்காதிருக்கவே தீர்மானித்திருக்கிறோம். (By; அஷ்கர் தஸ்லீம்)
Home

Sunday 17 February 2013

Banna & Books

1/







ஒரு தடவை இமாம் ஹசன் அல் பன்னாவிடம் நீங்கள் ஏன் புத்தகங்கள் எழுதுவதில்லை எனக் கேட்கப்பட்டது.அதற்க்கு அவர்கள் ஒற்றை வரியில் "நான் மனிதர்களை எழுதுகிறேன் "
80 வருடங்களில் எத்தனை மனிதர்கள் அவரால் எழுதப் பட்டுள்ளார்கள்..!

மனிதன் மரணித்தாலும் இலட்சியங்கள் மரணிப்பதில்லை.